# தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் 20 கோரிக்கை மனுக்களை அளித்தார்

> தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.விஜய் பாலாஜி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு.கிரிராஜ் சிங் அவர்களை சந்தித்து, மாநிலத்தின் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை மேம்பாட்டிற்கான 20 விரிவான கோரிக்கைகளை சமர்ப்பித்தார். இக்கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.
- **Published**: 2026-07-14
- **URL**: https://news.nammamap.in/press-release/22158-tamil-nadu-minister-seeks-textile-industry-aid

---

ஈரோடு மாவட்டத்தில் பிரத்யேக விசைத்தறிப் பூங்கா அமைப்பதற்கு நிதியுதவி வழங்குதல்.

காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம் நிறுவுதல்.

கைத்தறி வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளுதல்.

ஆரணி கைத்தறிப் பட்டுப் பூங்கா இரண்டாம் கட்டத்திற்கான நிதி ஒப்புதல் வழங்குதல்.

கைத்தறித் தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளித்தல்.

தொடக்க நிறுவனங்கள் / முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான சிறப்பு கூறு நிதியுதவி வழங்குதல்.

நூல் விநியோகத் திட்டத்தின் கீழ் ஜரிகைக்கு 15 விழுக்காடு மானியம் வழங்குதல்.

தமிழ்நாடு ஜரி லிமிடெட், காஞ்சிபுரத்தில் வெள்ளி இழை உற்பத்தி அலகு அமைத்தல்.

மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்கு விடுவிக்கப்பட வேண்டிய பல்வேறு திட்ட நிலுவைகளை விடுவித்தல்.

ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் ஜவுளி தொகுதிகளில் பூஜ்ஜிய திரவவெளியேற்ற (ZLD) வசதியுடன் கூடிய பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (CETPs) அமைப்பதற்கு நிதியுதவி வழங்குதல்.

நூற்பாலைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பருத்தி இறக்குமதிக்கான 11% இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்குதல் (தற்போது 31.10.2026 வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது).

தொழில் நுட்ப ஜவுளி மேம்பாடு மற்றும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக அரசு-தொழில் துறை பிரதிநிதிகள் குழு வெளிநாட்டு பயணங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நிதியுதவி வழங்குதல்.

SAFE (Site Adjacent Factory Employee Accommodation) திட்டத்தை விரைந்து செயல்படுத்துதல்.

தேனி வைகை உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா திட்டத்தை செயல்படுத்த கால நீட்டிப்பு வழங்குதல் மற்றும் வருவாய் வசூல் சட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தல்.

மத்திய அரசால் நிறுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தை (SITP) மீண்டும் அறிமுகப்படுத்துதல்.

மதுரையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில், சந்தைப்படுத்துதல் மற்றும் கொள்முதல் மையம் அமைப்பதற்கான நிதி உதவி கோருதல்.

திருநெல்வேலியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில், சந்தைப்படுத்துதல் மற்றும் கொள்முதல் மையம் அமைப்பதற்கான நிதி உதவி கோரப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் பஞ்சலோக சிற்பக் கைத்திறத் தொழிலுக்கான பொது வசதி மையத்தை ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கான நிதியுதவி கோருதல்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரச்சிற்பக் கைவினைக்கான புதிய பொது வசதி மையம் அமைப்பதற்கு ரூ.3.00 கோடி நிதியுதவி கோருதல்.

சர்வதேச சந்தைப்படுத்துதல் நிகழ்வுகள் மற்றும் காந்தி சில்ப் பஜார் கண்காட்சிகள் (3 சர்வதேச / 2 தேசிய / 3 மாநில / 2 மாவட்ட அளவில்) நடத்துவதற்கான மானியக் கோரிக்கை.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)