# ஜூலை 16, 2026 அன்று பதிவுக்கான கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு

> பதிவுத்துறை, ஜூலை 16, 2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள சொத்துப் பதிவுகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, ஆடி மாதத்தை முன்னிட்டு கூடுதல் முன்பதிவு வில்லைகளை ஒதுக்கியுள்ளது.
- **Published**: 2026-07-14
- **URL**: https://news.nammamap.in/press-release/22161-extra-registration-advance-booking-tokens

---

ஜூலை 16, 2026 அன்று கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 வில்லைகள் வழங்கப்படும்.

இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 வில்லைகள் வழங்கப்படும்.

அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளும், கூடுதலாக 4 தட்கல் வில்லைகளும் (மொத்தம் 16) வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)