# வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) - சந்தேகங்களைத் தீர்க்கும் தினசரி இணையவழி கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் - தொடர்பாக

> தமிழ்நாடு பதிவுத்துறை அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைப்பிரிவுகளின் முதல் விற்பனைக்கு 17.08.2026 முதல் கட்டாயமாக "வருகையில்லா ஆவணப்பதிவு" திட்டத்தை செயல்படுத்துகிறது. இது தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க கட்டடவிற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்காக தினசரி இணையவழி கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- **Published**: 2026-07-14
- **URL**: https://news.nammamap.in/press-release/22162-presenceless-registration-doubt-clarification-meeting

---

அடுக்குமாடி குடியிருப்பு (Flat) மற்றும் மனைப் பிரிவுகளின் (Plot) முதல் விற்பனைக்கு 17/08/2026 முதல் 'வருகையில்லா ஆவணப்பதிவு' (Presenceless Registration) கட்டாயமாக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் மற்ற ஆவணப் பதிவுகளும் இந்த 'வருகையில்லா ஆவணப்பதிவு' முறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.

புதிய நடைமுறை குறித்த சந்தேகங்களைத் தீர்க்கவும், செயல்முறை விளக்கம் அளிக்கவும் கட்டடவிற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்காக தினசரி இணையவழி பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் (Google Meet) மதியம் 02.00 மணி முதல் 03.00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Meeting ID: 2510 633 2645, கடவுச்சொல்: 1234.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)