# திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து - உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

> திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய பேட்டரியில் காரீயம் பிரித்து எடுக்கும் தனியார் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர். மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-07-14
- **URL**: https://news.nammamap.in/press-release/22163-chief-minister-announces-aid-boiler-explosion-tiruvallur

---

காயமடைந்த ஒன்பது நபர்களுக்கு உயரிய சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவு.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 இலட்சம் நிதியுதவி.

உயிரிழந்தவரின் உடலை அரசு செலவில் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை.

படுகாயமடைந்த மூன்று நபர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் நிதியுதவி.

இலேசான காயமடைந்த ஆறு நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)