# தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் புதுதில்லியில் ஒன்றிய அமைச்சரை சந்தித்தார்

> தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் புதுதில்லியில் ஒன்றிய அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் பொது விநியோக அமைப்பை வலுப்படுத்துதல், கொள்முதல் மற்றும் விநியோக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
- **Published**: 2026-07-14
- **URL**: https://news.nammamap.in/press-release/22165-tamil-nadu-union-minister-food-public-distribution-meeting

---

தமிழ்நாட்டின் பொது விநியோக அமைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

நெல் மற்றும் உணவுப் பொருட்கள் கொள்முதல், சேமிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒன்றிய அரசின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பு தேவைப்படும் கோரிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் எழுத்துப் பூர்வமாக வழங்கப்பட்டன.

உணவு மற்றும் பொதுவிநியோகத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மேம்படுத்துவதற்கும், எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கும் இச்சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)