# திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

> திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக 2,548.94 ஏக்கர் நிலங்களுக்கும், கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் வடமலையான்கால் மூலம் மேலும் 3,231.97 ஏக்கர் நிலங்களுக்கும், ஆக மொத்தம் 5,780.91 ஏக்கர் நிலங்களுக்கும் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- **Published**: 2026-07-15
- **URL**: https://news.nammamap.in/press-release/22172-tirunelveli-kodumudiyar-reservoir-water-release-kar-season

---

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 16.07.2026 முதல் 108 நாட்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு வினாடிக்கு 50 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறப்பு, இதன் மூலம் 2,548.94 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கூடுதல் நீர்வரத்து இருப்பின், வடமலையான்கால் மூலம் மேலும் 3,231.97 ஏக்கர் நிலங்களுக்கும் சேர்த்து வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறப்பு, ஆக மொத்தம் திருநெல்வேலி மாவட்டத்தில் 5,780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)