# செய்தி வெளியீடு எண்: 409 - சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் வழங்கினார்.

> உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். மேலும், அத்தியாவசியப் பொருட்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை வலியுறுத்தினார்.
- **Published**: 2026-07-15
- **URL**: https://news.nammamap.in/press-release/22177-minister-distributes-new-ration-cards-chennai

---

சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைவரையும் விரைவாகச் சென்றடைய வேண்டும் என்ற உறுதிப்பாடு.

நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேவையான பொருட்களை முறையாகப் பெற்றுக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை மற்றும் தனியார் அரிசி அரவை ஆலையிலிருந்து அரிசியாக பெறப்படுகிறது.

சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வியாபாரிகளிடமிருந்து வெளிச்சந்தை விலையில் பெறப்பட்டு, தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, விலையில்லா மற்றும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்கும் ஒவ்வொரு முறையும் கட்டாயமாக ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுமக்களின் பங்களிப்புடன் அத்தியாவசியப் பொருட்கள் வெளிச்சந்தைக்கு முறைகேடாக விற்கப்படுவதைத் தடுத்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)