# சென்னை மற்றும் ஆந்திர பிரதேச மீனவர்களிடையே கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்த்து, மீனவர்கள் சுமூகமான மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு

> சென்னை மற்றும் ஆந்திர பிரதேச மீனவர்களிடையே நிலவி வரும் நீண்டகால மீன்பிடிப் பிரச்சனைகளைத் தீர்க்கவும், ஆந்திர அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட சென்னை படகுகளை விடுவிக்கவும் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
- **Published**: 2026-07-16
- **URL**: https://news.nammamap.in/press-release/22178-tamil-nadu-andhra-pradesh-fishermen-fishing-dispute

---

சென்னை மற்றும் ஆந்திர பிரதேச மீனவர்களிடையே கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்பொழுது சென்னையைச் சார்ந்த 7 விசைப்படகுகள் ஆந்திர மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காணும் நோக்கில் இரு மாநில அதிகாரிகள் கொண்ட மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

11.07.2026 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், நெல்லூரில் இரு மாநிலங்களுக்கிடையேயான உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சென்னை மீன்பிடிபடகுகளை உடனடியாக விடுவித்திடவும், சென்னை மீனவர்கள் வழக்கம்போல் ஆந்திர மாநில கடற்பகுதிகளில் மீன்பிடித்திட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து சுமூகமான மீன்பிடிப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)