# சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

> சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா தலைமையில் இன்று நடைபெற்றது. பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
- **Published**: 2026-07-16
- **URL**: https://news.nammamap.in/press-release/22181-chennai-monsoon-preparedness-review-meeting

---

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

சாலை வெட்டுகள் உள்ள இடங்களில் சாலைப் பணிகளை முடித்து, மக்களுக்கு சீரான போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும்.

தேவையான அளவிற்கு மருந்துகள் இருப்பதை உறுதி செய்திடவும், மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1913 என்ற உதவி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எரியாத தெருவிளக்குகள், மழைநீர் தேங்கும் இடங்கள், குப்பைகள் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும்.

நீர்வளத்துறையின் சார்பில் கால்வாய் மேம்பாடு, நீர்நிலைகள் தூர்வாருதல், தடுப்புச் சுவர்கள் உயர்த்துதல் போன்ற பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் உட்பட வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளை தூர்வார வேண்டும்.

ஆபத்தான நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும்.

சென்னை மெட்ரோ இரயில் பணிகளால் பாதிக்கப்பட்ட மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும்.

கழிவுநீர் இறைப்பு நிலையங்களில் 24 மணிநேரமும் செயல்படும் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவி, டீசல் ஜெனரேட்டர்கள் மற்றும் பம்ப் செட்கள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மின் பகிர்மானப் பெட்டிகள், மின்மாற்றிகளின் உயரம் உயர்த்துதல், விநியோகக் கம்பிகளை வலுப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மழைக்காலங்களில் பொறுப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளில் மழைநீர் வடிகால், நிலத்தடி கழிவுநீர் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பான பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)