# பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன், மாவட்ட அளவில் கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (Educational Loan Facilitation Officer) விரைவான சேவை வழங்கப்படும் - மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் அறிவிப்பு

> பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் மாவட்ட அளவில் கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (Educational Loan Facilitation Officer) வழங்கப்படும் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
- **Published**: 2026-07-17
- **URL**: https://news.nammamap.in/press-release/22185-collateral-free-education-loan-facilitation-officers-tamil-nadu

---

பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் கல்வி கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (உதவி பேராசிரியர்கள் நிலையில்) நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழிகாட்டி, வங்கிகளுடன் தொடர்பு ஏற்படுத்துவார்கள்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கல்விக் கடன் விநியோக செயல்முறையை திறம்பட மற்றும் குறித்த நேரத்தில் நடைபெறுவதை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுப்பார்கள்.

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பொருளாதார காரணங்களால் இடைநிற்றலைத் தடுக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)