# தமிழ் நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம்: மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு- 2026

> தமிழ்நாடு அரசு யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மதிப்பீட்டுத் தேர்வு செப்டம்பர் 6, 2026 அன்று நடைபெறும் என அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்படும் 1000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7500 வழங்கப்படும். அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கையும் இந்தத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இருக்கும்.
- **Published**: 2026-07-17
- **URL**: https://news.nammamap.in/press-release/22186-tamil-nadu-upsc-incentive-scheme-evaluation-exam

---

யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு-2027 ஊக்கத்தொகை திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தேர்வு 06.09.2026 அன்று நடைபெறும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 1000 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7500 வழங்கப்படும்.

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கை இந்தத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இருக்கும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் 18.07.2026 அன்று முதல் தொடங்கப்பட்டு, 03.08.2026 அன்றுடன் நிறைவடையும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)