# தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அமைந்துள்ள முன்காண் திரையரங்கில் முதன்முறையாக மன இறுக்கம் (Autism) கொண்ட 40 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு திரைப்படம் திரையிடும் நிகழ்ச்சியினை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் இன்று (18.07.2026) தொடங்கி வைத்தார்கள்.

> மன இறுக்கம் கொண்ட 40 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு, பொது இடங்களுக்குச் செல்லும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் திரைப்படம் திரையிடும் நிகழ்ச்சி அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 'Finding Nemo' எனும் உயிர்பூட்டல் படம் திரையிடப்பட்டது.
- **Published**: 2026-07-18
- **URL**: https://news.nammamap.in/press-release/22191-autism-children-film-screening-mgr-institute

---

ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் மன இறுக்கம் கொண்டவர்களுக்கான சிறப்பு திரைப்படக்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்.

திரைப்படத் துறையினர் அதிக அளவில் பயன்படுத்தும் வகையில், படப்பிடிப்பு தளங்களை வாடகை அடிப்படையில் செயல்படுத்துவதற்கான தற்போதைய வாடகைக் கட்டணங்களை மறுஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)