# தமிழ்நாடு மாநில ஹஜ் குழு: ஹஜ் 2027 விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு

> தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் 2027 பயணத்திற்கான ஆன்லைன் விண்ணப்ப காலக்கெடு 24.7.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கணினி வழி குலுக்கல் தேர்வு 30.7.2026 அன்று நடைபெறும். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகள் முதல் தவணையாக ரூ. 1,52,300/-ஐ 10.8.2026-க்குள் செலுத்த வேண்டும்.
- **Published**: 2026-07-21
- **URL**: https://news.nammamap.in/press-release/22204-tamil-nadu-hajj-application-deadline-lottery-payment

---

ஹஜ் 2027 ஆன்லைன் விண்ணப்ப காலக்கெடு 24.7.2026, இரவு 11:59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது.

ஹஜ் 2027-க்கான கணினி வழி குலுக்கல் தேர்வு 30.7.2026 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும்.

குலுக்கல் தேர்வு https://www.hajcommittee.gov.in இணையதளத்தில் நேரலை (Livestream) செய்யப்படும்.

தற்காலிகமாக தேர்வு பெற்றவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியல்கள் இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் வெளியிடப்படுவதுடன், குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் தெரிவிக்கப்படும்.

தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புனிதப் பயணிகள் முதல் தவணையாக ரூ. 1,52,300/-ஐ 10.8.2026-க்குள் செலுத்த வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)