# தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த திறனாய்வுக் கூட்டம்

> சென்னை கிண்டியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற திறனாய்வுக் கூட்டத்தில், தொழிலாளர் பாதுகாப்பு, நலன் மற்றும் வெளிப்படையான ஆய்வுகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
- **Published**: 2026-07-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22209-minister-reviews-industrial-safety-health-worker-welfare-tamil-nadu

---

ஆய்வின் போது தொழிலாளர் பாதுகாப்பு, உடல்நலன் மற்றும் நலவசதிகளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு.

ஆய்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அனைத்து துறை சேவைகளும் இணையவழி வாயிலாக வழங்கப்பட வேண்டும்.

இணையவழி ஒதுக்கப்படும் தொழிற்சாலைகளின் ஆய்வறிக்கைகள் இயக்கக வலைதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

அம்மோனியா பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்க 21 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 28 தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தங்குமிடங்கள் மாற்ற உத்தரவு.

விருதுநகரில் 1,140 பட்டாசுத் தொழிற்சாலைகளில் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ள 12 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உடனடி அபாயகரமான சூழல்களில் இயங்கி வந்த 130 தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர்களை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.

அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவதை தடுக்க தீவிர ஆய்வுகள்.

ஊறுவிளைவிக்கும் மற்றும் அபாயகரமான பணிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு காலமுறை மருத்துவப் பரிசோதனைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)