# ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளம் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

> தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளம், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களால் இன்று (23.07.2026) திறந்து வைக்கப்பட்டது.
- **Published**: 2026-07-23
- **URL**: https://news.nammamap.in/press-release/22214-minister-aadhav-arjuna-inaugurates-renovated-anna-swimming-pool

---

ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளம் திறந்து வைக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தில் 50 மீட்டர் பெரிய நீச்சல் குளம், 25 மீட்டர் பயிற்சி நீச்சல் குளம், புதிய வடிகட்டும் அமைப்புகள் மற்றும் உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன.

1500 சதுர அடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடமும், 4 பயிற்றுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை (ரூ. 12.50 கோடி) மற்றும் கரூர் (ரூ. 6.27 கோடி) மாவட்டங்களில் புதிய நீச்சல் குளங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் (ரூ. 23 லட்சம்) மற்றும் சென்னை வேளச்சேரி (ரூ. 16.35 கோடி) ஆகிய இடங்களில் உள்ள நீச்சல் குளங்களுக்கான புனரமைப்புப் பணிகள் உட்பட மொத்தம் 4 நீச்சல் குளங்களுக்கு ரூ. 35.35 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)