# காவிரி - மேகதாது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழாக்கம்

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது அணை தொடர்பாக ஒன்றிய ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்று தெரிவித்திருப்பது ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மேகதாது திட்டத்திற்கு சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதி வழங்கப்படக்கூடாது என்றும், கீழ்ப்படுகை மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
- **Published**: 2026-07-28
- **URL**: https://news.nammamap.in/press-release/22234-cm-letter-mekedatu-dam-cauvery-water-dispute

---

27 ஜூலை 2026 அன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் அளித்த பதில் திரும்பப் பெறப்பட வேண்டும்.

காவிரி நீர்விவகார நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் மாண்புமிகு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் வெளிப்படையாகவும் நிரூபிக்கத்தக்க வகையிலும் இணங்குவதாக உறுதி செய்யப்படாத வரையில், மேகதாது திட்டத்திற்கு எந்தவிதமான சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கப்படக்கூடாது.

நீரின் அளவு மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர் வெளியீட்டு முறை இரண்டிலும் கீழ்ப்படுகை மாநிலங்களின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இத்திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு பரிசீலனையும், அனைத்து கீழ்ப்படுகை மாநிலங்களின் பாதகங்களையும் கருத்தில் கொண்டு, முழுமையான தொழில்நுட்ப மற்றும் சட்ட ஆய்வுக்குப் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)