# தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1 பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.07.2026) தலைமைச் செயலகத்தில், மனித வள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி-I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
- **Published**: 2026-07-29
- **URL**: https://news.nammamap.in/press-release/22235-chief-minister-issues-appointment-orders-group-one-tnpcb

---

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1 பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தொகுதி-1 பணிகளுக்கு 78 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் (28 துணை ஆட்சியர்கள், 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 19 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 15 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள், 6 உதவி ஆணையர்கள் (தொழிலாளர்)).

தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் (தொழிலாளர்) பணியிடம் முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-I-இல் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் 48 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் (40 உதவி பொறியாளர்கள், 6 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், 2 நூலகர்கள் தரம்-II).
---
- [All articles](https://news.nammamap.in/press-release)