# நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டமானது நடைபெற்றது.

> மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் இன்று (29.07.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-07-29
- **URL**: https://news.nammamap.in/press-release/22241-water-resources-review-minister-chief-minister-vision

---

நீர்நிலைகளை முறையாக தூர்வார வேண்டும்.

பெருநிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளை முறையாகப் பயன்படுத்தி, நீர்நிலைகளையும், வரத்து வாய்க்கால்களையும் தூர்வாரி பராமரிக்க வேண்டும்.

அவர்களுக்கு தேவைப்படும் தடையின்மைச் சான்று உடனடியாக வழங்கப்படவேண்டும்.

மேற்கண்ட பணிகளை விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் புகார்களுக்கு இடமளிக்காத வகையிலும் செயல்படுத்த வேண்டும்.

வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரி பராமரிக்க வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)