# மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

> மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி அலகுகள் மற்றும் தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் கையெழுத்தாகின. இதன் மூலம் கணிசமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- **Published**: 2026-07-30
- **URL**: https://news.nammamap.in/press-release/22243-tamil-nadu-attracts-global-investments-job-creation

---

உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி அலகுகள் மற்றும் தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.

2,920-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கம்.

சப் (Chubb) நிறுவனம் உலகளாவிய திறன் மையம் அமைப்பதன் மூலம் 220 வேலைவாய்ப்புகள் உருவாக்கம்.

நார்டெக்ஸ் (Nordex) நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதன் மூலம் 1,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கம்.

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (UWA) சென்னை வேளச்சேரியில் ரூ.125 கோடி முதலீட்டில் தனது முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை அமைக்கும், 200-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கம்.

மோட்டிவ்லிங்க் (MotiveLink) நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம் 1,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கம்.

தமிழ்நாடு உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான உலகளாவிய மையமாக நிலைநிறுத்தப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)