# தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணை, 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணை மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.14.13 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ்அர்ஜுனா அவர்கள் வழங்கினார்.

> மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (30.07.2026) தலைமைச் செயலகத்தில், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையினையும், 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
- **Published**: 2026-07-30
- **URL**: https://news.nammamap.in/press-release/22246-minister-distributes-pension-appointment-orders-sportspersons-coaches

---

பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டன.

3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டன.

ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.14.13 இலட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டன (விளையாட்டு வீரர்களுக்கு ரூ.9.36 இலட்சம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.4.77 இலட்சம்).

6 பயிற்றுநர்களுக்கு (4 பெண், 2 ஆண்) பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பொருளாதாரத்தில் நலிந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000/- ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

தற்போது 82 முன்னாள் விளையாட்டு வீரர்களும் மற்றும் 13 குடும்ப ஓய்வூதியதாரர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)