# தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து ஆய்வுசெய்து குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (31.07.2026) தலைமைச் செயலகத்தில், தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
- **Published**: 2026-07-31
- **URL**: https://news.nammamap.in/press-release/22258-chief-minister-reviews-monsoon-water-agriculture-funds

---

குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு.

குடிநீர் ஆதாரங்களைப் பலப்படுத்த ஆழ்துளைக் கிணறுகளைத் தூர்வாருதல், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், நீரேற்ற நிலையங்களைப் புனரமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை 15.08.2026-க்குள் முடித்திட முதலமைச்சர் அறிவுறுத்தல்.

கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் வட்டார அளவில் சேமித்து வைத்திட அறிவுறுத்தல்.

மாநிலத்தின் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் உரிய மாவட்டங்களுக்குச் சென்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமை, குடிநீர் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசியத் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாடின்றிக் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)