# தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை

> 2026-2027 ஆம் ஆண்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாகும். தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள், நல்ல சம்பளம் மற்றும் கல்வி உதவித்தொகைகள், இலவசப் பொருட்கள் போன்ற பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- **Published**: 2026-07-31
- **URL**: https://news.nammamap.in/press-release/22261-iti-direct-admissions-tamil-nadu

---

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 14.08.2026 வரை நீட்டிப்பு

தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை

மாதம் ரூ.750/- கல்வி உதவித்தொகை

அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ.1000/- கூடுதல் உதவித்தொகை

விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணிகள், பயிற்சிக்கான கருவிகள், பேருந்து வசதி

தொழிற்பயிற்சி மாணவர்கள் பத்தாம்/பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ் பெறவும், பாலிடெக்னிக்குகளில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரவும் வாய்ப்பு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)