# ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம்

> வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
- **Published**: 2026-08-02
- **URL**: https://news.nammamap.in/press-release/22267-elderly-disabled-pds-items-distribution-chennai-homes

---

ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் செயல்படும் 1346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)