# உயர்கல்வித் துறை சார்பில் ரூ.274.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 274 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைக் கட்டடங்கள், திறன்மிகு மையங்களுக்கான பணிமனைகள், நூலகங்கள், மின்னணு நூலகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
- **Published**: 2026-08-04
- **URL**: https://news.nammamap.in/press-release/22276-cm-inaugurates-higher-education-buildings-tamil-nadu

---

தமிழ்நாடு முழுவதும் 51 உயர்கல்விசார் கட்டடங்கள் திறப்பு.

புதிய கல்விசார் கட்டமைப்பு வசதிகளுக்காக மொத்தம் ரூ.274.46 கோடி செலவு.

புதிய வசதிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பணிமனைகள், திறன்மிகு மையங்கள், நூலகங்கள், மின்னணு நூலகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடங்கள் அடங்கும்.

அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவை இக்கட்டமைப்பு வசதிகளால் பயனடைகின்றன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)