# எல்-நினோ தாக்கங்கள் குறித்து கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை வழங்கவும் தமிழ்நாடு அரசு நிபுணர் குழு அமைத்தது

> எல்-நினோ தாக்கங்களைக் கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழையில் பற்றாக்குறை மற்றும் நீர்நிலைகளில் குறைந்த நீர் இருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பான குடிநீர் மற்றும் கால்நடை பராமரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- **Published**: 2026-08-04
- **URL**: https://news.nammamap.in/press-release/22282-el-nino-impact-water-scarcity-tamil-nadu-government-measures

---

எல்-நினோ தாக்கங்களைக் கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை வழங்கவும் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

நிபுணர் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.

பாதுகாப்பான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்த ரூ.330 கோடி நிதி ஒதுக்கீடு.

கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் - மீனவர் நலத் துறைக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

வறட்சி தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க மொத்தம் ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு.

குடிநீர் தட்டுப்பாட்டைத் தடுக்கவும், கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)