# மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில், பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல. நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

> போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல. நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிக அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
- **Published**: 2026-08-04
- **URL**: https://news.nammamap.in/press-release/22284-transport-secretary-bus-procurement-meeting-electric-buses

---

பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேருந்து கொள்முதல், குறிப்பாக மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிக அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

பேருந்து கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளை வகுப்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தகுதியுள்ள நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்கவும் குறைந்த விலையில் தரமான பேருந்துகளை கொள்முதல் செய்யவும் ஒப்பந்தப் புள்ளி விதிமுறைகளை சீரமைக்க ஆலோசனை வழங்கப்பட்டது.

போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கு பேருந்துகளை விரைவாக கொள்முதல் செய்து சிறந்த போக்குவரத்து சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுரை வழங்கப்பட்டது.

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கொள்முதல் ஆணைப்படி பேருந்துகளை விரைவில் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட பேருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)