# சென்னை-ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம், ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் திறந்து வைத்தார்.

> மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை திறந்து வைத்தார். இத்தடகளம் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு தேசிய, பன்னாட்டு தரத்திற்கு இணையான பயிற்சி வசதிகளை அளிக்கும் நோக்கில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும் இச்செய்தி வெளியீடு விவரிக்கிறது.
- **Published**: 2026-08-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22320-minister-inaugurates-renovated-athletic-track-chennai

---

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளம் திறந்து வைக்கப்பட்டது.

இராமநாதபுரம், சேலம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.38 கோடியே 24 இலட்சம் மதிப்பில் புதிய செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

கடந்த 3 மாத காலங்களில், 10 மாவட்டங்களில் தடகள எறிதல் மையம், செயற்கையிழை ஹாக்கி மைதானங்கள், பாரா விளையாட்டரங்கங்கள், முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம் ஆகியவை ரூ. 31 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)