# ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (13.8.2026) கடிதம் எழுதியுள்ளார்.
- **Published**: 2026-08-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22329-cm-letter-delimitation-women-reservation-tamil-nadu

---

மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆக நிரந்தரமாகத் தொடர வலியுறுத்தல்.

மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய அளவிலேயே நிரந்தரமாக்க வலியுறுத்தல்.

எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தல்களிலும், மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதிசெய்ய வலியுறுத்தல்.

தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பாக உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)