# மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வகுப்புக்களைத் தொடங்கி வைத்தார்

> மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான தொழிற்பயிற்சி நிலைய வகுப்புகளைத் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி மற்றும் வரைபடக் கருவிகளை வழங்கினார். மேலும், கடந்த ஆண்டு மாநில அளவிலான படைப்புத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கினார்.
- **Published**: 2026-08-14
- **URL**: https://news.nammamap.in/press-release/22340-minister-inaugurates-iti-training-classes

---

2026-27 ஆம் கல்வியாண்டுக்கான தொழிற்பயிற்சி நிலைய வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.

மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி மற்றும் வரைபடக் கருவிகள் வழங்கப்பட்டன.

9வது மாநில அளவிலான படைப்புத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்த 10 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

2026-ஆம் கல்வியாண்டில் 100% சேர்க்கை மேற்கொண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 31.08.2026 வரை சேர்க்கை நடைபெறுகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)