# தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

> 2026-2027 ஆம் ஆண்டு கலந்தாய்வுக்கான தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 14.08.2026 அன்று நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-08-15
- **URL**: https://news.nammamap.in/press-release/22342-iti-admission-deadline-extension-tamil-nadu

---

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2026 வரை நீட்டிப்பு.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை.

கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ 1000/- கூடுதலாக வழங்கப்படும்.

விலையில்லா மிதிவண்டி, சீருடை, மூடு காலணிகள், பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தேர்வாக தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழையும் பெறலாம்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பிலும் சேரலாம்.

கடந்த ஆண்டுகளில் 95% பயிற்சியாளர்கள் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)