# தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ், விவசாயப் பெருமக்களின் நலனிற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார்.
- **Published**: 2026-08-17
- **URL**: https://news.nammamap.in/press-release/22347-tamil-nadu-government-announces-additional-crop-loan-waiver-farmers

---

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு கூடுதல் தள்ளுபடி அறிவிப்பு.

75,000 ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100% முழுமையாகத் தள்ளுபடி.

75,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 75,000 ரூபாய் வரை தள்ளுபடி.

1,00,000 ரூபாய்க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 35,000 ரூபாய் வரை தள்ளுபடி.

கூடுதல் தள்ளுபடியால் அரசுக்கு 953.06 கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.

மொத்தமாக 6,220 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி 13.34 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)