# கும்பகோணம் திருக்கோயிலிலிருந்து களவாடப்பட்டு இங்கிலாந்திலிருந்து மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 17.8.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலிலிருந்து களவாடப்பட்டு, இங்கிலாந்து நாட்டிலிருந்து மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையைப் பார்வையிட்டார்.
- **Published**: 2026-08-18
- **URL**: https://news.nammamap.in/press-release/22352-thirumangai-azhwar-idol-recovery-cm-view

---

கும்பகோணம் திருக்கோயிலிலிருந்து களவாடப்பட்டு இங்கிலாந்திலிருந்து மீட்கப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மீட்கப்பட்ட சிலையை பார்வையிட்டார்.

சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்தபின், திருமங்கை ஆழ்வார் சிலை அதன் மூலக்கோயிலில் மீண்டும் நிறுவப்படும்.

களவாடப்பட்ட மற்ற சிலைகளான காளிங்கநர்த்தனர் கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகளும் வெளிநாடுகளில் கண்டறியப்பட்டன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)