# சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

> வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இன்று (22.08.2026) சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு. என்.ஆனந்த் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 283 தனியார் துறை நிறுவனங்களும் 10 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டன. 9671 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர், இதில் 2973 நபர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது.
- **Published**: 2026-08-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22382-chennai-mega-private-job-fair

---

283 தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்களும் 10 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டன.

9671 வேலைநாடுநர்கள் பதிவு செய்து பல்வேறு நிறுவனங்களின் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்.

25 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 2973 வேலைநாடுநர்கள் பணிநியமனம் பெற்றனர்.

316 நபர்கள் முதற்கட்ட நேர்முகத்தேர்வில் தேர்ச்சிபெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதிபெற்றனர்.

57 வேலைநாடுநர்கள் திறன் பயிற்சிக்காகவும், 97 வேலைநாடுநர்கள் அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்காகவும் பதிவு செய்தனர்.

21 நபர்கள் உள அளவை மதிப்பீட்டு சோதனையில் பயன்பெற்றனர்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)