# பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு

> பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினமான 27.08.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- **Published**: 2026-08-25
- **URL**: https://news.nammamap.in/press-release/22389-additional-registration-tokens-aavani-avittam-pournami

---

ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு.

இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு.

அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு (மொத்தம் 16 தட்கல் வில்லைகள்).
---
- [All articles](https://news.nammamap.in/press-release)