# முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஓணம் வாழ்த்து சமூக வலைதளப் பதிவு

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
- **Published**: 2026-08-26
- **URL**: https://news.nammamap.in/press-release/22393-cm-greetings-onam-tamil-nadu

---

கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும் என்று முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வாழ்த்தியுள்ளார். அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் இதயங்கனிந்த ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)