# மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவது குறித்து மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களின் அறிக்கை.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாட்களுக்கு டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
- **Published**: 2026-08-26
- **URL**: https://news.nammamap.in/press-release/22396-mettur-dam-water-release-delta-irrigation-tamil-nadu

---

மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாட்களுக்கு நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், 01.09.2026 அன்று, மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்க உள்ளார்கள்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பாசனப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகள், கிடைக்கும் நீரை சிக்கனமாகவும் திட்டமிட்டும் பயன்படுத்தி, வேளாண்மைத் துறையின் ஆலோசனையுடன் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்றடைவதையும், ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல் கிடைப்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)