# ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட வீரதீரச் செயலுக்கான சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருது - கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த தலைமை ஆசிரியர் பி.எஸ் கௌரிசங்கர் ராஜா அவர்களின் மனைவிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், ஒன்றிய அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான 'சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா' விருதினைப் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் காலஞ்சென்ற தலைமை ஆசிரியர் பி.எஸ். கௌரிசங்கர் ராஜா அவர்களின் மனைவி திருமதி கொ. சிரிஷா அவர்களிடம் 'சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா' (மிகச்சிறந்த உயிர்ப் பாதுகாப்பு) விருதுக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார்.
- **Published**: 2026-08-27
- **URL**: https://news.nammamap.in/press-release/22401-cm-presents-sarvottam-jeevan-raksha-award-teacher-wife

---

மறைந்த தலைமை ஆசிரியர் பி.எஸ். கௌரிசங்கர் ராஜா அவர்களின் மனைவிக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்பட்டது.

பி.எஸ். கௌரிசங்கர் ராஜாவின் வீரதீரச் செயல் மற்றும் தியாகம் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு மரணத்திற்குப் பிந்தைய விருது வழங்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)