# நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் காரணமாக, அந்நாட்டிற்கு சுற்றுலா சென்று அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் காரணமாக, அந்நாட்டிற்கு சுற்றுலா சென்று அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-08-27
- **URL**: https://news.nammamap.in/press-release/22403-cm-meeting-nepal-flood-tamil-rescue

---

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உள்ளுறை ஆணையர் திரு. ஆஷிஷ் குமார், இ.ஆ.ப. அவர்கள் தலைமையிலான குழுவினர் நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்திட உத்தரவு.

மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர ஏற்பாடு.

தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையினைக் கண்டறிந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் உத்தரவு.

அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு.

ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை, நேபாள நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம், புதுதில்லியிலுள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பயண முகவர் நிறுவனங்களின் உதவியுடன் துரித நடவடிக்கைகள்.

மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் புதுதில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்பார்வையிடுதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)