# சிறந்த நூல் பரிசு திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பெற 05.10.2026 வரை கால நீட்டிப்பு வழங்கப்பெறுகிறது.

> தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் பரிசு திட்டத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 05.10.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்களுக்கான நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தார்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
- **Published**: 2026-08-28
- **URL**: https://news.nammamap.in/press-release/22415-tamil-nadu-best-book-award-application-deadline-extended

---

சிறந்த நூல் பரிசு திட்டத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 05.10.2026 வரை நீட்டிப்பு.

2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறந்த நூல்களுக்கான நூலாசிரியர்களுக்கு ரூ.50,000/-ம், பதிப்பகத்தார்களுக்கு ரூ.25,000/-ம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

33 வகைப்பாடுகளில் நூல்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவங்கள் துறையின் வலைதளத்திலிருந்து (tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும், ரூ.100/- போட்டிக் கட்டணமும் ("தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை" என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை) இணைக்கப்பட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)