# ஆவணி மாத சுபமுகூர்த்த தினத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு

> பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாத சுபமுகூர்த்த தினமான 31.08.2026 அன்று அதிக பத்திரப் பதிவுகளை மேற்கொள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- **Published**: 2026-08-28
- **URL**: https://news.nammamap.in/press-release/22417-additional-tokens-sub-registrar-offices-aavani-month

---

ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு.

இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு.

அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு, ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)