# தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்களின் நேரடி சேர்க்கை

> தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2026 உடன் நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி 07.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ITI படிப்பின் நன்மைகள், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் அரசு சலுகைகள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- **Published**: 2026-09-03
- **URL**: https://news.nammamap.in/press-release/22438-iti-direct-admission-extension-tamil-nadu

---

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 07.09.2026 வரை நீட்டிப்பு.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை.

மாணவர்களுக்கு மாதம் ரூ.750/- கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் கூடுதலாக ரூ.1000/- வழங்கப்படும்.

விலையில்லா மிதிவண்டி, சீருடை, மூடு காலணிகள், பயிற்சிக்கான கருவிகள் மற்றும் கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும்.

எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு முடித்து சேரும் மாணவர்கள், ITI பயிலும்போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தேர்வராக தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழைப் பெறலாம்.

ITI தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் நேரடியாக இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம்.

கடந்த ஆண்டுகளில் பயிற்சி பெற்றவர்களில் 95% பேர் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 உள்ளிட்ட நவீன தொழிற்பிரிவுகளிலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)