# தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை சென்னையில் ஆய்வு

> தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள், சென்னை மாநகராட்சியின் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், ஏரி மற்றும் கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செப்டம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
- **Published**: 2026-09-05
- **URL**: https://news.nammamap.in/press-release/22452-chief-secretary-inspects-monsoon-preparedness-chennai

---

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.

மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

அடையாறு மண்டலத்தில் ரூ.13.52 கோடி மதிப்பீட்டில் 660 மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்.

பெருங்குடி மண்டலத்தில் ரூ.6.48 கோடி மற்றும் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் கால்வாய் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்.

நாராயணபுரம் ஏரி, ரேடியல் சாலை கல்வெட்டுகள் மற்றும் ஒக்கியம் மடுவு கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்.

சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ரூ.73 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து பக்கிங்ஹாம் கால்வாயுடன் இணைக்கும் மழைநீர் வடிகால் பணியினை ஆய்வு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)