# அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். பாடப்பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி 07.09.2026 முதல் 15.09.2026 வரை செயல்படும் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் தகவல்

> அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். பாடப்பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி 07.09.2026 முதல் 15.09.2026 வரை செயல்படும்.
- **Published**: 2026-09-07
- **URL**: https://news.nammamap.in/press-release/22458-tamil-nadu-government-bed-admissions-second-phase

---

பி.எட். பாடப்பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி 07.09.2026 முதல் 15.09.2026 வரை செயல்படும்.

முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 70 காலியிடங்கள் மற்றும் 10 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 508 காலியிடங்கள் என மொத்தம் 578 இடங்கள் உள்ளன.

மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

10 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)