# நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் தொடங்கப்படுகிறது

> தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இப்பட்டப்படிப்புக்கான ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- **Published**: 2026-09-08
- **URL**: https://news.nammamap.in/press-release/22460-tamil-nadu-government-launches-master-theatre-arts-chennai

---

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்படுகிறது.

இப்பட்டப்படிப்பு 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் சென்னையில் உள்ள அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் செயல்படும்.

மாதம் ரூ.25,000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 21.09.2026 மாலை 5.00 மணி.

முதுகலை பட்டப்படிப்பு (MTA) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 21.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை www.tnjjmfau.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)