# பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை 139 நாட்களுக்கு பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சிறப்புத் தள்ளுபடி

> பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 15, 2026 முதல் ஜனவரி 31, 2027 வரை 139 நாட்களுக்கு பருத்தி மற்றும் பட்டு கைத்தறிப் பொருட்களுக்கு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் மொத்தம் 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்.
- **Published**: 2026-09-10
- **URL**: https://news.nammamap.in/press-release/22470-anna-birthday-handloom-special-discount-tamil-nadu

---

பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15, 2026 முதல் ஜனவரி 31, 2027 வரை 139 நாட்களுக்கு பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சிறப்புத் தள்ளுபடி.

பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கு கூடுதலாக 10 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட 139 நாட்களில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கு மொத்தம் 30 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.

பருத்தி இரகங்களுக்கு, ஒரு உருப்படிக்கு 20 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.100/- என நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையில், இதில் எது குறைவோ அந்தத் தொகை தள்ளுபடி மானியமாக வழங்கப்படும்.

பட்டு இரகங்களுக்கு, ஒரு உருப்படிக்கு 20 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.200/- என நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையில், இதில் எது குறைவோ அந்தத் தொகை தள்ளுபடி மானியமாக வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)