# தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இங்கிலாந்து பயணம்

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொள்கிறார். மாநிலத்தின் முந்தைய முதலீட்டு வெற்றிகளை (ஒரு லட்சம் கோடி ரூபாய் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 8491 கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்கள்) அடிப்படையாகக் கொண்டு, இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) மற்றும் முன்மொழியப்பட்ட மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தொடர்பான வாய்ப்புகளை ஆராய்வதும் இந்த பயணத்தின் நோக்கமாகும்.
- **Published**: 2026-09-10
- **URL**: https://news.nammamap.in/press-release/22477-cm-joseph-vijay-england-industrial-investments

---

முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து பயணம்.

தற்போதைய அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்கள் மூலம் 5,690 வேலைவாய்ப்புகள் உருவாக்கம்.

இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

தமிழ்நாட்டில் 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ பார்வையிடத் திட்டம்.

முதலமைச்சர் தலைமையிலான குழு 10.09.2026 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு, 17.09.2026 அன்று சென்னை திரும்பும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)