# கே.எம்.எஸ் 2026-2027 பருவத்திற்கு சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600 என்ற உயர்த்தப்பட்ட விலையில் நெல் கொள்முதல்

> நடப்பு கே.எம்.எஸ் 2026-2027-ம் பருவத்தில் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750/-, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600/- என்ற உயர்த்தப்பட்ட விலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இது வரை 42,082 மெ.டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன், மாநில அரசின் ஊக்கத் தொகையுடன் சேர்த்து இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி விடுமுறை நாட்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-09-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22490-tamil-nadu-paddy-procurement-prices-tncsc

---

கே.எம்.எஸ் 2026-2027 பருவத்திற்கு சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750/- ஆகவும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600/- ஆகவும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கான மாநில ஊக்கத் தொகை ரூ.156/-லிருந்து ரூ.289/- ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கான ஊக்கத் தொகை ரூ.131/-லிருந்து ரூ.159/- ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

11.09.2026 வரை 12 மாவட்டங்களில் 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 7,043 விவசாயிகளிடமிருந்து 42,082 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன் கருதி விடுமுறை தினமான 13.09.2026 அன்று குறிப்பிட்ட மண்டலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக சேமித்து, உரிய காலத்தில் கிடங்குகளுக்கு இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல் வரத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)