# நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் - சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை

> நீடித்த கோடை வெப்பம் மற்றும் குறைந்த காற்றாலை மின் உற்பத்தி காரணமாக அதிகரித்த மின் தேவையை சமாளிக்க, தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்து, மாநிலம் முழுவதும் சீரான மின்விநியோகத்தை உறுதி செய்துள்ளது.
- **Published**: 2026-09-12
- **URL**: https://news.nammamap.in/press-release/22492-tamil-nadu-electricity-board-power-supply-measures

---

அதிகரித்த மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்.

மின் தொகுப்பின் நிலைமை சீராகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது.

மின்விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில்.

வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்க அறிவுறுத்தல்.

நாள் முழுவதும், குறிப்பாக இரவு நேரங்களிலும், சீரான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் உறுதி.

மின் நுகர்வோர்கள் புகார்களுக்கு 'மின்னகம்' சேவை மையத்தின் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)