# விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தீவிர வாகனத் தணிக்கை.

> விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு ஐந்து நாட்களாக தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டது. இதில் 1169 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ. 59 லட்சத்திற்கும் மேல் அபராதம் மற்றும் வரி வசூலிக்கப்பட்டது.
- **Published**: 2026-09-15
- **URL**: https://news.nammamap.in/press-release/22517-omni-bus-inspection-overcharging-vinayagar-chathurthi-tamil-nadu

---

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1169 ஆம்னி பேருந்துகள் விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஐந்து தினங்களில் ஆம்னி பேருந்துகள் தொடர்பாக வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ. 59,02,074/- வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பேருந்துகள் மீதும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் மற்றும் சாலை வரி செலுத்தப்படாமல் இயங்கிய 6 பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டன.

ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில், பயணிகளுக்கு மாற்றுப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்; தவறினால் அனுமதிச்சான்று ரத்து செய்யப்படும்.

பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும்.

இதனை உறுதிசெய்வதற்காக தமிழ்நாட்டில் சுமார் 40 சிறப்புத் தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)