# விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

> விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
- **Published**: 2026-09-16
- **URL**: https://news.nammamap.in/press-release/22524-ministers-honor-ramasamy-padayachiyar-birth-anniversary

---

விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த நாள் (செப்டம்பர் 16) தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்னாரது சேவையைப் போற்றும் வகையில், 1993-ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை இராமசாமி படையாட்சியார் மாவட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)